×

மைக்ரோசாப்ட் முடக்கம் சரி செய்யப்பட்டது எப்படி?

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் முடக்கியதும் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், நிபுணர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு சிக்கலை தீர்த்து வைத்ததாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் முடங்கியது.

மைக்ரோசாப்ட் தனது சைபர் பாதுகாப்புக்காக இணைந்துள்ள கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் அப்டேட் காரணமாக 85 லட்சம் சாதனங்கள் முடங்கின. இதனால் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் முடங்கியதால் பல வணிகங்கள் செயலிழந்தன. இந்தியாவில் விமான நிறுவனங்கள் பயணிகளின் செக் இன் நடைமுறையை செய்ய முடியாமல், அதை எழுத்துப்பூர்வமாக செய்தன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது குறித்து மைக்ரோசாப்ட் அளித்துள்ள விளக்கத்தில், ‘‘மைக்ரோசாப்ட் முடக்கத்தை சரி செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்ட அவர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்த்து வைத்தனர். இது ஒரு அரிதான பிரச்னை. இது தொழில்நுட்பத்தை நம்பியுள்ள இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் பாதுகாப்பான செயல்படுத்துதல் மற்றும் பிரச்னைகளை மீட்டெடுப்பதில் முன்னுரிமை அளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை தெரியவைத்துள்ளது’’ என கூறி உள்ளது.

The post மைக்ரோசாப்ட் முடக்கம் சரி செய்யப்பட்டது எப்படி? appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Microsoft ,Dinakaran ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...