×
Saravana Stores

அடுத்த மாதம் இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தாம்பரம்: அடுத்த மாத இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசின் திட்டப்பணி ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு, செயலாளர் காகர்லா உஷா, உறுப்பினர் செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா ஆகியோருடன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சென்னை வண்டலூர் வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர் உடற்பயிற்சி பூங்கா, வெள்ளனூர் உடற்பயிற்சி பூங்கா, திருநாகேஸ்வரம் உடற்பயிற்சி பூங்கா, வரதராஜபுரம் உடற்பயிற்சி பூங்கா, முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு, பணி குறித்த விவரங்கள் மற்றும் பணி எப்போது முடிவடையும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:சரியான திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தேவைப்படுகின்ற பல்வேறு கட்டமைப்புகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

ஆம்னி பஸ்கள் நிறுத்துவதற்கு என தனியாக இடம்வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 42.70 கோடி ரூபாய் செலவில் ஒருமுறை 117 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் இந்த பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக இன்று காலையில் இருந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

The post அடுத்த மாதம் இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nodachur Omni bus station ,Minister ,Sekharbhabu ,Tambaram ,P. K. Sekarpapu ,Department of Hindu Religious Affairs ,Chennai Metropolitan Development Group ,Sekarbabu ,
× RELATED ஆறுதலும் கூறவில்லை, நிவாரணமும்...