×
Saravana Stores

அகழியை கடந்து ஊருக்குள் நுழைய முயன்ற காட்டு யானை: வனத்துறையினர் விரட்டியடிப்பு

கூடலூர்: கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட முதுமலை புலிகள் காப்பக வன எல்லையை ஒட்டி அகழிகள் அமைக்கப்பட்டுள்ள. தற்போது பல இடங்களில் அகழிகள் சேதம் அடைந்துள்ளதால் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அகழிகளை தூர்வாரி மின்வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஏராளமான வனப்பணியாளர்களும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வனஎல்லையை ஒட்டிய கிராமமான குனியல்வயல் பகுதிக்குள் நுழைவதற்காக ஒற்றைக் காட்டு யானை ஒன்று அகழியை ஒட்டி வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் யானையை விரட்டுவதற்காக அப்பகுதிக்கு சென்றனர். வனத்துறையினர் வருவதைப் சுதாரித்துக் கொண்ட காட்டு யானை வாலை சுருட்டிக் கொண்டு சத்தமிட்டபடி வேகமாக வனப்பகுதிக்குள் ஓடியது. இரவில் மீண்டும் யானை அப்பகுதிக்கு வரலாம் என்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் தீ மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post அகழியை கடந்து ஊருக்குள் நுழைய முயன்ற காட்டு யானை: வனத்துறையினர் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Old Mountain Tigers Archive ,Sri Madurai Uratchee ,
× RELATED கூடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்...