×
Saravana Stores

கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் விளம்பர பதாகைகள் அகற்றம்

 

கும்பகோணம், ஜூலை 21: கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின்பேரில் நகர திட்டமிடுநர் கண்ணன், உதவி நகர திட்டமிடுநர் அருள்செல்வன் மேற்பார்வையில், நாகேஸ்வரன் வடக்கு வீதி, கீழவீதி, தஞ்சாவூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் பதாகைகளை அதிரடியாக அகற்றினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது: கும்பகோணம் முழுவதும் ஏராளமான இடங்களில் விளம்பரப்பலகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் மின் கம்பங்கள், மாநகராட்சிக்கு சொந்தமான மின் சாதனங்கள், சுவர்கள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பதாகைகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுமாயின் சிலர் விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர். அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்ற மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

 

The post கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் விளம்பர பதாகைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam-Mayiladuthurai road ,Kumbakonam ,Municipal Commissioner ,Lakshmanan Uttaravinber ,City Planner ,Kannan ,Dinakaran ,
× RELATED மதுரையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆணையர்