- அனைத்துலக சதுரங்க நாள் விழா
- வள்ளலார் கல்வி நிறுவனம்
- அரியலூர்
- பன்னாட்டு சதுரங்க நாள்
- லிங்கத்தடிமேடு
- சோமசுந்தரம்
- தின மலர்
அரியலூர், ஜூலை 21: அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் சர்வதேச சதுரங்க தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற விழாவிற்கு கல்வி நிலையப் பொருளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். எண்ணங்களின் சங்கமம் அமைப்பாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின் சதுரங்க போட்டியை தொடக்கி வைத்து பேசுகையில், சதுரங்கமானாலும் வாழ்க்கையானலும் அவரவர் எடுக்கும் முடிவுகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
சதுரங்கத்தில் உள்ள காய்களுக்கு எப்படி தனித் தனிச் சிறப்பு உள்ளதோ, அதே போல் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனி திறமை உண்டு. எப்போது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ, அப்போது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். முடிந்த வரை செய்வது முயற்சி அல்ல, அந்த செயல் முடியும் வரை செய்வது தான் முயற்சி என்றார். அதையடுத்து, போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
The post வள்ளலார் கல்வி நிலையத்தில் சர்வதேச சதுரங்க தின விழா appeared first on Dinakaran.