×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வழிமொழிகிறோம்: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதை வழிமொழிகிறோம் என்று கூறி அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்ற குரல், அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலிக்கிறது. அவர் முறையாக கட்சியில் வளர்ந்தவர். கட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்.

என்னுடைய தனிப்பட்ட மரியாதையை விட கட்சியின் நோக்கு, பலம்தான் முக்கியம். என்னுடைய வாழ்க்கையில், 60 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன். என் வளர்ச்சியை விட, என்னுடைய குடும்ப வளர்ச்சியை விட, கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன். எனவே கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி நடப்பேன். திருப்பூரில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அளித்த பேட்டி: திமுக இளைஞரணி 45வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனை நான் வழிமொழிகிறேன். உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வராக திறம்பட செயலாற்றக்கூடிய திறமை உள்ளது.

அவர் துணை முதல்வராகும் பட்சத்தில் தமிழகத்தில் இன்னும் சிறப்பான ஆட்சியை கொண்டு வர முடியும். இதனால் அவர் துணை முதல்வராவதை வழிமொழிகிறோம். திருச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக அமைந்துள்ளது அதற்கு முக்கிய காரணம் திமுகவின் இளைஞரணி அமைந்து 45 ஆண்டுகள் முடிந்து விட்டது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாள் தான் இன்று. இன்னும் கால் நூற்றாண்டுகள் தமிழகத்தை வளமாக்க உழைப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

 

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வழிமொழிகிறோம்: அமைச்சர்கள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,Deputy Prime Minister ,Chennai ,Water Minister ,Duraimurugan ,Chief Minister ,MLA Thackeray ,Minister ,Adyanidhi Stalin ,K. Stalin ,Dinakaran ,
× RELATED ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!