×

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அரியானாவில் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000: ஆம் ஆத்மி அறிவிப்பு

சண்டிகர்: அரியானா பேரவை தேர்தலையொட்டி பல்வேறு இலவச அறிவிப்புகளை ஆம் ஆத்மி அறிவித்து உள்ளது. அரியானா பஞ்ச்குலா பகுதியில் நேற்று நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள் என்ற பெயரில் 5 இலவச அறிவிப்புகளை கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வௌியிட்டார். அதன்படி “அரியானாவில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் மாதம்தோறும் குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை, மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம், மொகல்லா கிளினிக்குகள் மற்றும் இலவச சிகிச்சை, அரசு பள்ளிகளில் இலவச கல்வி, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கப்படும்” என அறிவித்துள்ளது. இந்ந நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், சந்தீப் பதக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அரியானாவில் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000: ஆம் ஆத்மி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Haryana ,AAP ,Chandigarh ,Aam Aadmi Party ,Ariana assembly elections ,Kejriwal ,Sunita Kejriwal ,Panchkula ,Ariana ,Dinakaran ,
× RELATED டெல்லி நோக்கி பேரணி போராட்டம் ஷம்பு...