×

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மனோலோ மார்க்கெஸ் நியமனம்

டெல்லி: இந்திய ஆடவர் கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்க்கெஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக இருப்பார்.

உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 2வது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து. இந்திய அணி கத்தார், ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமனம் செய்தது.

மனோலோ மார்கிஸ் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய ஆடவர் கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மனோலோ மார்க்கெஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Manolo Marquez ,Indian Men's Football Team ,Delhi ,Spain ,men's football team ,World Cup ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!