×

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 21 பேருக்கு மயக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவால் பணியில் ஈடுபட்டி கொண்டிருந்த பெண் ஊழியர்கள் 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.ச்சுத்திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் புதூர் பாண்டியாபுரம் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை இயங்கி வருகிறது. இதில் கடலில் பிடித்து வரக்கூடிய மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பணி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமானோர் இந்த மீன் பதப்படுத்தி ஆலையில் பணியாற்றி வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து எற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாக மீன்களை குளிரூட்டுவதற்கு பயண்படுத்தக்கூடிய வாயு குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இரவு பணியில் இருந்த 21 பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 21 பேருக்கு மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி டவுன் கண்ட்ரோல் ரூமில் புதிதாக சிசிடிவி கேமரா அமைப்பு