திண்டுக்கல், ஜூலை 20: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 31ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டை பிரதிகளில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள GDP ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 31ல் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.