×

கடன் தொல்லை காரணமாக 17, 13 வயது மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்னபருகூரை சேர்ந்தவர் ரமேஷ் (45). கல் உடைக்கும் தொழிலாளி.மனைவி உஷா (37). மகள்கள் நிவேதா (17), ஷர்மிளா (13). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12, 8ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் ரமேசுக்கு போதிய வருவாய் இல்லாததால் கடன் பிரச்னையில் அவதிப்பட்டுள்ளனர். இதனால் அடிக்கடி இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவில் நேற்று (19ம் தேதி) ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டிய நிலையில் பலரிடம் கடன் கேட்டுள்ளனர். எங்கும் கிடைக்காததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரமேஷ், பெங்களூருவில் உள்ள தம்பி கணேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். பின்னர் தந்தை காத்தவராயனிடம் எனக்கு வாழவே பிடிக்கவில்லை தற்கொலை செய்யப் போகிறேன் என கூறி, போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காத்தவராயன், மகன் வீட்டிற்கு வந்து பார்த்த போது அங்கு மருமகள் உஷா, பேத்திகள் நிவேதா, ஷர்மிளா ஆகியோர் தூக்கில் பிணமாக கிடந்துள்ளனர். தகவலறிந்து பர்கூர் போலீசார் வந்து ரமேஷை நேற்று மதியம் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடன் தொல்லையால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், உஷா மகள்களுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

The post கடன் தொல்லை காரணமாக 17, 13 வயது மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ramesh ,Chinnabarukur ,Parkur ,Krishnagiri district ,Usha ,Nivetha ,Sharmila ,Government Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED போலி என்சிசி முகாம் நடந்த...