×
Saravana Stores

கொலை மிரட்டல் வழக்கில் கோர்ட்டில் ஆஜர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை காவல்

கரூர்: கொலை மிரட்டல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 31ம்தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ரூ.100கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன், உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தொழிலதிபர் பிரகாசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாங்கல் போலீசார் பதிவு செய்த வழக்கில் 2வதாக விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறைக்கு சென்று அவரிடம் அதற்கான குறிப்பானை கடிதத்தில் நேற்றுமுன்தினம் போலீசார் கையெழுத்து பெற்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை, வாங்கல் போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறையில் இருந்து நேற்று பிற்பகல் 12 மணியளவில் கரூர் அழைத்து வந்தனர். பின்னர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2, நீதிபதி (பொ) மகேஷ் முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை வரும் 31ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் மீண்டும் அவரை போலீசார் திருச்சி அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கொலை மிரட்டல் வழக்கில் கோர்ட்டில் ஆஜர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை காவல் appeared first on Dinakaran.

Tags : MR Vijayabaskar ,Karur ,Former ,AIADMK ,minister ,M.R. Vijayabaskar ,Praveen ,
× RELATED கரூர்- முக்கணாங்குறிச்சி இடையே சாலை...