×

ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது படுகொலையை கண்டிப்பது விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு எதிராக என்பதை விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை இயக்க தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விசிகவுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் நாம் பங்கேற்க கூடாது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது, அந்த படுகொலையை கண்டிப்பது விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும். யாரோடும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.

எந்த தலித் இயக்கத்தையும் விசிக எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை. இந்த கூட்டணிக்கு எதிராக, திமுக அரசுக்கு எதிராக தேவையற்ற முழக்கங்களை எழுப்புகிற கும்பல் ஏராளமாக இருக்கிறார்கள். ஆகவே விசிக தனித்து எந்த இயக்கத்தையும் மேற்கொள்ளலாம், நிகழ்ச்சி, நினைவேந்தல், போராட்டங்களை நடத்தலாம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது விசிகவின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Thirumavalavan ,CHENNAI ,Vishikava ,DMK ,
× RELATED திருமாவளவனுக்கு கூடுதல் பாதுகாப்பு