×

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் 2வது கட்ட ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டங்கள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், முதற்கட்டமாக 10.7.2024 முதல் 19.7.2024 (நேற்று) வரை நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், 2ம் கட்டமாக 24.7.2024 முதல் 5.8.2024 வரை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான அதிமுக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

வருகிற 24ம் தேதி தேனி ஆரணி, 25ம் தேதி தென்காசி, ஈரோடு, 26ம் தேதி திருப்பூர், கடலூர், 29ம் தேதி திண்டுக்கல், திருவள்ளூர், 30ம் தேதி தூத்துக்குடி, நாமக்கல், 31ம் தேதி கள்ளக்குறிச்சி, சேலம், ஆகஸ்ட் 1ம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, 5ம் தேதி கரூர், புதுச்சேரி ஆகிய நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறும். நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

 

The post நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் 2வது கட்ட ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,CHENNAI ,General Secretary ,Rayapetta ,Dinakaran ,
× RELATED பள்ளியில் சர்ச்சை பேச்சு: பழனிசாமி கண்டனம்