- சைவ சித்தாந்தம்
- கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- அமைச்சர்
- சென்னை
- சேகர்பாபு
- கொளத்தூர்
- கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- வைத்தர்
சென்னை: கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை சைவ சித்தாந்தம் பட்ட படிப்பிற்கான வகுப்புகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி, பேசியதாவது: கொளத்தூர், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4ம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கிறது. திருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒட்டுமொத்தமாக 22,247 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ரூ.80 கோடி செலவில் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் போன்றவற்றை ஏற்படுத்தப்படுகிறது. பழனி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மதிய உணவும் அளிக்கப்படுகிறது.
இந்த கல்லூரியில் தற்போது 747 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தாண்டு இங்கு இறுதியாண்டு பயின்று வந்த 235 மாணவ, மாணவிகளில் 141 மாணவ, மாணவிகள் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எந்த கல்லூரியிலும் இல்லாத அளவில் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 25 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இந்த கல்விப் பணி திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த பட்ட படிப்பு: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.