×

கனிம திருட்டுகளை தடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

சென்னை: கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு கனிமவளத்துறையின் வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டது. சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் வைத்துள்ள நிலுவை தொகையை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் விதி மீறல்களை ஆய்வு செய்து அபராதம் விதிப்பது, அண்டை மாநிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்களை எடுத்து செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளை, எம்.சாண்ட் மற்றும் கிரஷர் அலகுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படைகள் மண்டலங்களில் திடீர் தணிக்கை மேற்கொண்டு கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, கனிம வளத்துறை ஆணையர் சரவணவேல்ராஜ் மற்றும் கனிம வளத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post கனிம திருட்டுகளை தடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister Durai Murugan ,CHENNAI ,Minister ,Durai Murugan ,Water Resources ,Duraimurugan ,Geology and ,Mining Department ,Chennai Secretariat… ,Dinakaran ,
× RELATED வேலூர் விஐடியில் கலைஞர் நூற்றாண்டு...