×

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

குன்றத்தூர்: மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆடி மாதம் தொடங்கிய நிலையில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மாங்காட்டில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தங்களின் வேண்டுதலுக்காக கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செலுத்தினார்கள். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து இலவச மற்றும் கட்டண சிறப்பு தரிசனத்திற்கும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவில் வளாகம் அமைந்துள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வரும் வாரங்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கோயில் நடை கூடுதல் நேரம் திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Mangadu Kamatshyamman Temple ,Friday ,Kamatshyamman ,Mangat ,Aadi ,Mangadu ,
× RELATED மாநகராட்சி செவிலியர் பணி நேர்காணல் தள்ளிவைப்பு