- முதலமைச்சர் திட்டம்
- சூணாம்பேடு ஊராட்சி
- சட்டமன்ற உறுப்பினர்
- பனையூர் பாபு
- சேயூர்
- முதலமைச்சர் திட்ட முகாம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- ஒன்றியக் குழு…
- முதலமைச்சர் திட்ட முகாம்
- சோனாம்பேடு ஊராட்சி
- தின மலர்
செய்யூர்: சூனாம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை எம்எல்ஏ பனையூர் பாபு கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட சூனாம்பேடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சார வாரியம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல் துறை, உள்ளிட்ட 15 துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் வரதராஜன், துணை செயலாளர் முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவா பூலோகம், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் நிர்மல் குமார், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், ஒன்றிய செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சூனாம்பேடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ பனையூர் பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.