- பெங்கலூரு-மங்களூர்
- Mangaluru
- தென்கனாரா
- கேப்டன்
- பிரிஜேஷ் சௌதா
- தென்மேற்கு ரயில்வே
- மங்களூர்
- பெங்களூரு
- தின மலர்
மங்களூரு: தென்கனரா எம்பி கேப்டன் பிரிஜேஷ் சவுதா தென்மேற்கு ரயில்வேக்கு பெங்களூரு-மங்களூரு இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார். இதனை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி மங்களூரு மற்றும் பெங்களூரு இடையே கூடுதல் ரயில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இது குறித்து எம்.பி. பிரிஜேஷ்சவுதா ரயில்வே அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கனமழை தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இதனால் போக்குவரத்துகள் பாதிப்பு உண்டாகிறது இதன் காரணமாக, மங்களூரு மற்றும் பெங்களூருவை இணைக்கும் முதன்மை தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் மைசூருவின் கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) ஆகியோருக்கு கடிதம் எழுதி, மங்களூரு மற்றும் பெங்களூரு இடையே கூடுதல் ரயில் சேவைகளை அவசரமாக வழங்குமாறு கோரியிருந்தார். மங்களூரு மற்றும் பெங்களூரு இடையே தினசரி பயணிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மாற்று போக்குவரத்து வசதிகள் இல்லாததால், கூடுதல் ரயில் சேவைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை கேப்டன் பிரிஜேஷ் சௌதா தெரிவித்துள்ளார். இந்த கூடுதல் சேவைகளை விரைவில் செயல்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
The post கனமழையால் சாலை போக்குவரத்து துண்டிப்பு பெங்களூரு-மங்களூரு இடையே கூடுதல் ரயில் சேவை: விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.