பெங்களூரு: வேஷ்டி கட்டி வந்த முதியவரை உள்ளே செல்ல அனுமதிக்காக ஜி.டி மால், ரூ.1.78 கோடி சொத்து வரி கட்டாததற்காக சீல் வைக்கப்பட்டது. பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள ஜி.டி வேர்ல்ட் மால் உள்ளது. 70 வயது முதியவர் ஒருவர் அவரது மகனுடன் திரைப்படம் பார்க்க அந்த மாலுக்கு வந்தார். வேஷ்டி கட்டி வந்ததால் அந்த 70 வயது முதியவர் தியேட்டருக்கு படம் பார்க்க செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். வேஷ்டி அணிந்து வந்ததற்காக மாலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் வெளியே தெரியவர, அதற்கு கண்டனம் தெரிவித்து மாலுக்கு வெளியே கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மால் உரிமையாளர் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில், ஜி.டி மால் 2023-2024ம் நிதியாண்டுக்கான சொத்து வரி கட்டாததற்காக மாலுக்கு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஜி.டி மால் நிர்வாகம் ரூ.1.78 கோடி சொத்து வரி கட்டவில்லை. இதுதொடர்பாக மால் நிர்வாகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும், அந்த வரியை கட்டாததால், மாநகராட்சி நிர்வாகம் ஒரு வாரத்திற்கு மாலுக்கு சீல் வைத்தது.
The post ரூ.1.78 கோடி சொத்து வரி பாக்கி: ஜி.டி மாலுக்கு சீல்: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.