×

வாகனங்களில் பாஸ்டேக் ஒட்டாவிடில் இரு மடங்கு கட்டணம் வசூல்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குட்பட்ட சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஒட்டியிருக்க வேண்டும். அப்படி ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம். பல வாகன ஓட்டிகள் காருக்குள் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை வைத்துள்ளனர். சுங்கச்சாவடியை கடக்கும்போது மட்டும் அதை கையில் எடுத்து முன்பக்க கண்ணாடியில் காட்டுகின்றனர்.

இதனால் தாமதம் ஏற்படுகிறது. அதனை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு மடங்கு கட்டணம் தொடர்பான அறிவிப்பை சுங்கச்சாவடியின் முன்பகுதியிலேயே பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும். ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை காரின் முன்பக்க கண்ணாடியில் உள்பக்கமாக ஒட்ட வேண்டும் என்ற விதி ஏற்கனவே உள்ளது. இத்தகவலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.

The post வாகனங்களில் பாஸ்டேக் ஒட்டாவிடில் இரு மடங்கு கட்டணம் வசூல்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ottawa ,National Highway Commission ,New Delhi ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 3 இடங்களில் புதிய...