×

பாகலூர் – ஒசூர் தாலூகா அலுவலக சாலையில் உள்ள ஹார்டுவர்டு கடையில் தீ விபத்து

ஒசூர்: ஒசூர் மாநகராட்சி ஹார்டுவர்டு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்து வருவதால் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி பாகலூர் – ஒசூர் தாலூகா அலுவலக சாலையில், ஏராளமான எலக்ட்ரிக், துணிக்கடைகள், ஹார்டுவர்ட்ஸ் கடைகள் செயல்பட்டு வருகிறது. கீழ் தளத்தில் ஹார்டுவர்ட்ஸ் கடையாகவும், மேல் தளத்தில் ஹார்டுவர்ட்ஸ் கடையின் பிளாஸ்டிக், கயிறு, இரும்பு உள்ளிட்டவைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மாடியின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஹார்டுவர்ட்ஸ் கடையின் குடோனில் திடீர் என தீப்பற்றி எரிந்து வருவதால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்து வருகின்றனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 10க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். குடோனின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதால் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post பாகலூர் – ஒசூர் தாலூகா அலுவலக சாலையில் உள்ள ஹார்டுவர்டு கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : BAGALUR ,Taluka office road ,Ozur Taluka ,Ozur ,Osur ,Krishnagiri District ,Ozur Municipality ,Ozur Taluka Office Road ,Hardwood ,Taluga Office Road ,Dinakaran ,
× RELATED விழிப்புணர்வு பேரணி