×
Saravana Stores

புதூர்-மடப்புரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் அணைக்கட்டு: கலெக்டர் ஆய்வு

 

திருப்புவனம், ஜூலை 19: திருப்புவனம் புதூர்-மடப்புரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் அணை வடிவமைப்பு நீர்வள ஆதார அமைப்பு கடந்த 2020-21ம் ஆண்டு அறிக்கை தயாரித்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

திட்டமதிப்பீடு, நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதமாகி வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி நபார்டு வங்கி அலுவலர்களும், நீர்வளத்துறை அலுவலர்களும் வைகை ஆற்றில் ஆய்வு செய்தனர். ரூ.40 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணை கட்டவுள்ள இடத்தை கலெக்டர் ஆஷா அஜீத் நேற்று ஆய்வு செய்தார். சருகணி ஆறு வடிநில வட்ட செயற்பொறியாளர் பாரதிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதூர்-மடப்புரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் அணைக்கட்டு: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vaigai River ,Putur-Madhapuram ,Tiruppuvanam ,Puthur-Madhapuram ,Tamil Nadu government ,Pudur-Madhapuram ,
× RELATED மதுரை முழுவதும் மழைநீர் தேக்கம்...