கூடலூர்,ஜூலை19: கூடலூரை அடுத்துள்ள முதல் மைல் பகுதியில் இருந்து யானை செத்தகொல்லி, ஈட்டி மூலா வழியாக செம்பாலை பகுதிக்கு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கூடலூரில் இருந்து செம்பாலா வழியாக கள்ளிக்கோட்டை செல்லும் சாலை, மற்றும் கூடலூரில் இருந்து முதல் மைல் வழியாக தேவர் சோலை செல்லும் சாலை ஆகிய இரண்டு பிரதான சாலைகளை சாலையாக இணைக்கும் சாலையாகவும், மாற்றுப்பாதையாகவும் இந்த சாலை உள்ளது.
நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலை உரிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த சாலையை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பழுதான சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.