×

சீர்காழி அருகே சட்டநாதபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

 

சீர்காழி, ஜூலை 19: சீர்காழி அருகே சட்டநாதபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது ெபாருட்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு. எழுது பொருள்கள். சில்வர் தட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். விழாவில் தொண்டு நிறுவனமான ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் சங்கம் சார்பில் அதன் தலைவர் கோபாலகிருஷ்ணன் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள், நோட்டு, தட்டு ஆகியவற்றை வழங்கி பேசினார். விழாவில் முன்னாள் தலைவர்கள் ரவிச்சந்திரன், மோகனசுந்தரம், நிர்வாகிகள் நாகமுத்து, வினோத், வீரபாண்டியன், சந்தோஷ்குமார், குமார், பாலாஜி, மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழி அருகே சட்டநாதபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Chattanathapuram Government School ,Sirkazhi ,Chattanathapuram Panchayat Union Middle School ,Sirkazhi, ,Mayiladuthurai District ,Chattanathpuram Government School ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் தமிழ்நாடு ஊரக...