×

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பி செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு நின்ற பெண்ணிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளத்தை சேர்ந்த விஜிதா(45) என்பது தெரிந்தது. சட்டவிரோதமாக படகில் இலங்கை செல்ல முயன்றதால், போலீசார் அவரை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இவரது கணவர் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக உள்ளார்.

கடந்த 2013ல் விமானம் மூலம் இலங்கையில் இருந்து இந்தியா வந்த விஜிதா, தமிழ்நாட்டில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கி இருந்துள்ளார். விஜிதாவின் பாஸ்போர்ட் விசா காலாவதியானதால், சொந்த நாட்டிற்கு படகில் செல்ல ஏஜன்ட்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏஜன்ட்களாக செயல்பட்ட தங்கச்சிமடத்தை சேர்ந்த அருளானந்தம்(39), அவரது 17 வயது மகன் ஆகிய இருவரையும் துறைமுக போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். முக்கிய புள்ளியாக செயல்பட்ட படகின் உரிமையாளர் ஜேசு(35)வை தேடி வருகின்றனர்.

The post ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பி செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka ,Vijitha ,Pandiankulam, Mullaitivu District, Sri Lanka ,
× RELATED கடலில் படகு மூழ்கி காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிருடன் மீட்பு!