×

மயிலாடியில் இருந்து பொற்றையடி வரை புத்தனாறு கால்வாய் சீரமைப்பு

அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி மாவட்டத்தில்  பெய்த கனமழையின் போது,  மயிலாடியிலிருந்து பொற்றையடி செல்லும் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் அடைப்பு காரணமாக,  மழை வெள்ளம் விவசாய விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து இந்த கால்வாயினை சீரமைக்க பொதுமக்கள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் பொதுப்பணித்துறை நிதியில் இருந்து ₹15 லட்சம் செலவில் மயிலாடிலிருந்து பொற்றையடி வரை உள்ள நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் ஆகாயத் தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த கரையோரங்களை சீரமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது….

The post மயிலாடியில் இருந்து பொற்றையடி வரை புத்தனாறு கால்வாய் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Puthanaru Canal ,Mayiladi ,Podayadi ,Anjugram ,Kanyakumari district ,Nanjil Nadu Putthanaru Canal ,Potiyadi ,
× RELATED எஸ்.எம்.பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா