×
Saravana Stores

சிறுபான்மையினரின் வழிபாட்டு தலம் மீது தாக்குதல் பாஜவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாராஷ்டிர மாநிலம் கஜாபூர் என்கிற கிராமத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் மீது மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான அறமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மக்களவை தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடியாத பாஜ அரசு, சிறுபான்மையினரையும் அவர்களது வழிபாட்டு தலங்களையும் தாக்கி விட்டால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என தப்புக் கணக்கு போடுகிறது. இந்தப் பள்ளிவாசலை இடித்த கயவர்கள் மீது உடனடியாக கடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களைச் சிறைக் கொட்டத்தில் அடைத்து தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சிறுபான்மையினரின் வழிபாட்டு தலம் மீது தாக்குதல் பாஜவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tawheed ,Jamaat ,BJP ,Chennai ,Tamil Nadu ,Tawheed Jamaat ,General Secretary ,Mujibur Rahman ,Muslims ,Gajapur ,Maharashtra ,India ,
× RELATED வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை...