×

வேட்டி அணிந்து வந்தவரை தடுத்த பெங்களூரு மால் ஒருவாரம் மூடல்

பெங்களூரு: பெங்களூரு மாகடி சாலையிலுள்ள ஜிடி மாலுக்கு விவசாயி ஒருவர் அவரின் மகனுடன் வந்தார். அப்போது மால் நிர்வாகம் வேட்டி அணிந்து உள்ளே வரக்கூடாது என அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக், மாஜி அமைச்சர் லட்சுமண் சவதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சபாநாயகர் யு.டி.காதர், வேட்டி அணிந்த விவசாயிக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இவ்விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஜிடி மால், 7 நாள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வேட்டி அணிந்து வந்தவரை தடுத்த பெங்களூரு மால் ஒருவாரம் மூடல் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,GT Mall ,Magadi Road, Bengaluru ,R Ashok ,Dinakaran ,
× RELATED சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு