- அமைச்சர்
- Geethajeevan
- திமுக
- தூத்துக்குடி
- தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
- நகரம்
- தூத்துக்குடி கலைஞர் அரங்கம்
- திமுக நகரம்
- தின மலர்
தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடியில் நாளை திமுக பிரதிநிதிகள் ஆலோசணை கூட்டம் நடக்கிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நாளை (20ம்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமை தாங்குகிறார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள் கலந்து வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தூத்துக்குடியில் நாளை திமுக மாநகர பிரதிநிதிகள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு appeared first on Dinakaran.