×
Saravana Stores

ராஜபாளையம் வாக்காளர்களுக்கு தென்காசி தொகுதி எம்பி நன்றி

 

ராஜபாளையம், ஜூலை 19: ராஜபாளையம் தொகுதி வாக்காளர்களுக்கு தென்காசி எம்பி டாக்டர் ராணி குமார் நன்றி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி குமார் அமோக வெற்றிவெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். ராஜபாளையம் நகர் பகுதியான மலையடிப்பட்டி, ஆவாரம்பட்டி, சம்மந்தபுரம், பொன்விழாமைதானம் மற்றும் ஒன்றியப்பகுதியான மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி, தெற்குவெங்காநல்லூர் ஊராட்சி, இஎஸ்ஐ காலனி போன்ற பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு டாக்டர் ராணி குமார் எம்பி, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். இதில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, துணை சேர்மன்கள் துரைகற்பகராஜ், கல்பனா குழந்தைவேலு, கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ராஜபாளையம் வாக்காளர்களுக்கு தென்காசி தொகுதி எம்பி நன்றி appeared first on Dinakaran.

Tags : Tenkasi Constituency ,Rajapalayam ,Tenkasi ,Dr ,Rani Kumar ,Dr. ,DMK ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் அருகே வாழை,...