×

சிவகிரி அருகே பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

சிவகிரி,ஜூலை 19: சிவகிரி அருகே பைக்கில் 120 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகிரி அருகேயுள்ள கொத்தாடப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை எஸ்ஐ வரதராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 120 கிலோ ரேஷன் அரிசியை பைக்கில் பதுக்கிவைத்து கடத்திச்செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்திவந்த சொக்கநாதன்புத்தூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்ற பொன்ராஜை (36) என்பவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகர்வோர் வணிக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

The post சிவகிரி அருகே பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,SI Varadarajan ,Kothadapatti ,
× RELATED சிவகிரி அருகே வாலிபர் தற்கொலை