×

மூச்சு திணறி ஒருவர் சாவு

சிதம்பரம், ஜூலை 19: சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் திருமாவளவன் (50). இவருக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் மூச்சு திணறல் நோய் இருந்து வந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அதிகமாக வலி ஏற்படவே, சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு காமராஜர் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருமாவளவன் மனைவி நர்மதா தேவி, அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூச்சு திணறி ஒருவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Thirumavalavan ,Usupur Krishnamurthy Nagar ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச்...