×

400 அடி டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் திடீர் போராட்டம்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே பரபரப்பு

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் 400 அடி டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (30) சுற்றுச்சூழல் ஆர்வலர். இவரது, வீட்டின் அருகில் புதியதாக மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியவில் ஜானகிராமன், அப்பகுதியில் மொபைல் போன் டவர் அமைப்பதை எதிர்த்து, அங்குள்ள 400 அடி டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைகண்ட, அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஒரகடம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், ஜானகிராமனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், அரைமணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு, அவர் டவர் மேலிருந்து தானக கீழே இறங்கினார். இதனையடுத்து போலீசார், அவரிடம் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post 400 அடி டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் திடீர் போராட்டம்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Perumbudur ,Sri Perumputur ,Kanchipuram District ,Oragadam ,Panruti ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மழைநீர்...