×

இந்திய மாணவி உயிரிழப்புக்கு காரணமான அமெரிக்க காவல்துறை அதிகாரி நீக்கம்

சியாட்டில்: ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி கண்டூலா(23). இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் உள்ள வடகிழக்கு பல்கலை கழகத்தில் தகவல் தொடர்பு துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். ஜானவி படிக்கும்போதே பகுதிநேர வேலையும் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி சியாட்டில் உள்ள ஒரு சாலையை கடக்க முயன்றார். அப்போது 120கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதியதில் ஜானவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் விபத்தை ஏற்படுத்திய சியாட்டில் காவல்துறை அதிகாரி கெவின் டேவ் டேனியல் என்பவர், மாணவி ஜானவி குறித்தும், அவரது மரணம் குறித்தும் கேலியாக பேசி, சிரிக்கும் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கண்டனத்தையும், எதிர்ப்பையும் எழுப்பியது. இதுதொடர்பான விசாரணையில் கெவின் டேவ் டேனியலை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மாணவியின் மரணம் குறிதது கிண்டல் செய்து சிரித்தது, சீயாட்டில் காவல்துறை மீது அமெரிக்க மக்களுக்கு இருந்த நற்பெயருக்கு களங்கம் கற்பித்துள்ளது என்றும், உலக அளவில் அமெரிக்க போலீசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது எனவும் காவல் துறை தலைவர் சூ ரார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய மாணவி உயிரிழப்புக்கு காரணமான அமெரிக்க காவல்துறை அதிகாரி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Seattle ,Janavi Khandula ,Kurnool district ,Andhra Pradesh ,Northeastern University ,Seattle, Washington, USA ,Janavi ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜெகன் கட்சி...