×

பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரம் சிறுமிக்கு முத்தம் கொடுத்தது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்: வாலிபருக்கு தர்ம அடி

திருவொற்றியூர்: பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் 12 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் பழகி வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கண்டித்ததுடன், அந்த வாலிபரை எச்சரித்துள்ளனர். இதனால், சிறுமி அந்த வாலிபரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சிறுமிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தப்பதிவு வைரலானது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அந்த வாலிபரை திருவொற்றியூர் பகுதியில் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அவரை சிறுமியின் உறவினர்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரம் சிறுமிக்கு முத்தம் கொடுத்தது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்: வாலிபருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Athram ,Dharma ,Tiruvottiyur ,Instagram ,Dharma Adi ,
× RELATED ஆபாச காட்சியில் நடித்தது ஏன்? ஐஸ்வர்யா சர்மா விளக்கம்