×

சானியா மிர்சாவுக்கு சமைக்க தெரியாது: சோயிப் மாலிக் ருசிகர பதில்.!

கொழும்பு: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இலங்கை பிரிமியர் லீக் டி.20 தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சோயிப் மாலிக் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் கலந்துகொண்டு உரையாடினர். இதில், ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டனர். அப்போது மாலிக்ஒரு கேள்விக்கு, எனது மனைவி சானியாவுக்கு சமைக்க தெரியாது. வெளியில் இருந்து ஆர்டர் செய்துதான் உணவை வாங்குவார், என்றார்.இரு வீரர்களில் சோம்பேறி யார் என்ற கேள்விக்கு ரியாஸ் தான் என மாலிக் பதில் அளித்தார். ஏனென்றால் ரியாஸ் ஒரு வேகப்பந்து வீச்சாளர், அவருக்கு நிறைய ஆற்றல் தேவை. ஒருவேளை அதனால்தான் அவர் சோம்பேறியாக இருக்கிறார், என்றார். யார் சாப்பாட்டு பிரியர் என்ற கேள்விக்கு, மாலிக் தான் என ரியாஸ் கூறினார். அவர் ஒரு நாளைக்கு 6 வேளை சாப்பிடுகிறார். அதிகாலை 3 மணிக்கு கூட அவரது அறையில் ஒரு கிளப் சாண்ட்விச் இருக்கும், என்றார். இதற்கு விளக்கம் அளித்த மாலிக், 6 வேளை என்றாலும் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவேன், என்றார்….

The post சானியா மிர்சாவுக்கு சமைக்க தெரியாது: சோயிப் மாலிக் ருசிகர பதில்.! appeared first on Dinakaran.

Tags : Sania Mirza ,Soib Malik ,Colombo ,Sri Lankan Premier League ,Sanya Mirza ,Dinakaran ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் போட்டி: அமைச்சர் தகவல்