×
Saravana Stores

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதிப்பெண் விவரங்களை வெளியிட வேண்டும்; மாணவர்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது. தேர்வு முடிவுகள் முழுமையாக தெரியாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தேர்வு மையங்கள் வாரியாக மதிப்பெண் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள முடியும். பாட்னா, ஹசாரிபக் உள்ளிட்ட இடங்களில் வினாத்தாள் கசிந்தது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் எந்த அளவுக்கு பரப்பப்பட்டன என்பன உள்ளிட்ட விஷயங்களை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என : தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

 

The post நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,National Examinations Agency ,Mark ,Dinakaran ,
× RELATED டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி