×
Saravana Stores

காலநிலை மாற்றத்தால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

சென்னை : காலநிலை மாற்றத்தால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலன் விளைவாக வட மற்றும் தென் துருவங்களில் பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகி வருகின்றன. பனிக்கட்டிகள் உருகுவதால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட மற்றும் தென் துருவங்களில் பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீர், புவியின் பூமத்திய ரேகையில் தஞ்சம் அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதாக கூறும் விஞ்ஞானிகள் இதனால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

The post காலநிலை மாற்றத்தால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Earth ,Chennai ,North ,South Poles ,Dinakaran ,
× RELATED அலர்ஜியை அறிவோம்..! டீடெய்ல் ரிப்போர்ட்!