×

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

லண்டன்: காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியா மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரையும் பணய கைதிகளை மீட்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 38,000 பேர் பலியாகியுள்ளனர். ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியா மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியான தீர்வு ஏற்பட வேண்டும்; பணையக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

The post காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,UN Security Council ,London ,Gaza ,NRA ,Security Council ,Hamas ,Israel ,ISIS ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்