×

கறம்பக்குடி அருகே உளுந்து பயிரில் மஞ்சள் அழுகல் நோய்

 

கறம்பக்குடி ஜூலை 18: கறம்பக்குடி அருகே விவசாயிகள் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிரில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனைத்து கிராமங்களில் உளுந்து பயிர் நேரடியாகவும் ஊடு பயிராகவும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒடப்ப விடுதி, மணமடை, செங்கமேடு போன்ற அனைத்து கிராமங்களிலும் வயல்களில் தோட்டங்களில் உளுந்து பயிர் விவசாயம் செய்து தற்போது நன்கு வளர்ந்து காணப்படுகின்றன. அதில் மணமடை போன்ற கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து உளுந்து பயிர்களையும் மஞ்சள் அழுகல் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், உளுந்து பயிர்களில் மஞ்சள்நோய் பாதிப்புகுறித்து வேளாண்மை துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யவும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கறம்பக்குடி அருகே உளுந்து பயிரில் மஞ்சள் அழுகல் நோய் appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Pudukottai District ,Ugra ,Dinakaran ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு