×

33% இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு; இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தாக்கு

தஞ்சை: ஒன்றிய பாஜக அரசு, 33% இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை மக்களவையில் இதுவரை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றி வருகிறது என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் தஞ்சை மாவட்ட சிபிஐ அலுவலகத்தில் மாநில தலைவர், முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் மஞ்சுளா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில்,  பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டிற்கான மசோதா முதன்முதலாக நாடாளுமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டு செப்.12ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2010 மார்ச் 10ல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ள ஒன்றிய பாஜக அரசு 33% இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை மக்களவையில் இதுவரை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றி வருகிறது.பெண்கள் நலனில் அக்கறையுள்ள தமிழக அரசு சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தனித் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு, செயல் திட்டங்களுக்கு நிர்பயா நிதியை முறையாக, முழுமையாக பயன்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை முடக்க கூடாது. வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். சம்பளத்தை உயர்த்த வேண்டும், இந்த திட்டத்தை மாநகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்க வேண்டும். குடும்ப வன்முறை சட்டம் 2005 அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் அறிவிப்பை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்த சமீபத்திய ஒன்றிய அமைச்சரவை கூட்ட முடிவால் எந்தவித நன்மைகளும் பெண்களுக்கு ஏற்பட போவதில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சம ஊதியம் உள்ளிட்ட நலத் திட்டங்களை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. …

The post 33% இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு; இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Union government ,National Commission of India ,Anjana ,Union ,National ,Commission of India Attack ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...