- மனக்குடி ஊராட்சி
- வேதாரண்யம்
- தலைமை சாலிட்
- முகாம் ஒன்றியக் குழு
- தலைவர் தமிழ்ஹராசி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேதராணியம் தலுகா
- மனக்குடி ஊராட்சி
- நாகப்பட்டினம் மாவட்டம்
- வேதராணியம் தலுகா தலனாயிரு யூனியன் மனக்குடி
- திட்டம்
- முகாம்
- தின மலர்
வேதாரண்யம், ஜூலை 18: வேதாரண்யம் தாலுகா மணக்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திடட முகாமை ஒன்றிய குழு தலைவர் தமிழரசி துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியகுழு தலைவர் தமிழரசி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர், தலைஞாயிறு ஒன்றிய திமுக செயலாளர் மகாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, வாட்டாகுடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம், ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அரசு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.
The post மணக்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.