×

நார்டியா ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் நடால்

பஸ்டாட்: ஸ்வீடனில் நடைபெறும் நார்டியா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ரபேல் நடால் (38 வயது, 261வது ரேங்க்) ஒலிம்பிக் மற்றும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். அதற்கு தயாராகும் வகையில் நார்டியா ஓபனில் களமிறங்கியுள்ள அவர் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீரர் ஜான் போர்கின் மகன் லியோ போர்குடன் (21 வயது, 461வது ரேங்க்) மோதினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் லியோ போர்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து அவர் கிரேட் பிரிட்டனின் கேமரான் நோர்ரி (28 வயது, 42வது ரேங்க்) சவாலை எதிர்கொள்கிறார்.

The post நார்டியா ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் நடால் appeared first on Dinakaran.

Tags : Nadal ,Nordic Open ,Spain ,Rafael Nadal ,ATP ,Nordia Open ,Sweden ,Dinakaran ,
× RELATED ஸ்பெயினில் களைகட்டிய ”தக்காளி...