- காமராஜ்
- ஒட்டன்சத்திரம் கல்லூரி
- ஒட்டன்சத்திரம்
- காமராஜர்
- தமிழ்த்துறை தமிழ் பரிஷத்
- அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சின்னையாகவுண்டன்வலசு
- ஒட்டன்சத்திரம்
- முதல் அமைச்சர்
- வாசுகி
- ஒட்டன்சத்திரம் கல்லூரி
ஒட்டன்சத்திரம், ஜூலை 18: ஒட்டன்சத்திரம் அருகே சின்னையகவுண்டன்வலசுவில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தமிழ் பேரவையின் சார்பில் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் வாசுகி தலைமை வகித்தார். விழாவில் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் சிறப்பு குறித்து மாணவிகளிடையே கலந்துரையாடல் நடந்தது. தொடர்ந்து போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாணவ- மாணவிகள், அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post ஒட்டன்சத்திரம் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.