×
Saravana Stores

டூவீலர் விபத்தில் பெண் பலி

தேவதானப்பட்டி, ஜூலை 18: வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவரது மனைவி மணிமேகலை (21). இருவரும் கடந்த ஜூலை 15ம் தேதி தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு டூவீலரில் சென்று விட்டு மீண்டும் வத்தலக்குண்டுவிற்கு டூவீலரில் திரும்பி கொண்டிருந்தனர். காட்ரோடு அருகே ஜீ.மீனாட்சிபுரம் பிரிவு பகுதியில் வந்த போது மணிமேகலை டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Balamurugan ,Vatthalakundu ,Gandhi ,Nagar ,Manimekalai ,Periyakulam, Theni district ,Vathalakundu ,Katrodu ,
× RELATED தவறை தட்டிக் கேட்டவருக்கு அடி