×

சில்லி பாயின்ட்…

* ஐபிஎல் போல அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி டி20 கிரிக்கெட் போட்டியான மேஜர் லீக் கிரிக்கெட்டின் 2வது சீசன் இப்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் நடைபெற வேண்டிய 21 லீக் ஆட்டங்களில் 14 லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்துள்ளன. வாஷிங்டன் ஃபிரீடம் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மோசஸ் ஹென்ரிக்ஸ் தலைமையிலான அந்த அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்றுள்ளது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

* சொந்த மண்ணில் இந்தியாவிடம் டி20 தொடரை இழந்த ஜிம்பாப்வே அணி அடுத்து அயர்லாந்து செல்கிறது. அங்கு ஒரே ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. கிரெய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22 வயது சுழற்பந்து வீச்சாளர் கெவின் ஹோய் அறிமுகமாக உள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர், அடுத்து இலங்கை செல்ல உள்ள அணித்தேர்வில் தீவிரமாக உள்ளார். அதற்காக நேற்று முன்தினம் காணொளி மூலம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கம்பீருடன் ஆலோசனை செய்தனர். கேப்டன் யார் என்பதே உறுதியாகாத நிலையில் வீரர்கள் யாரும் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை. ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி காரணமாக, இலங்கை செல்லும் டி20, ஒருநாள் என 2 வகை அணிகளையும் வழிநடத்தும் வாய்ப்பை சூரியகுமார் யாதவுக்கு அளிப்பது குறித்தும் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.

 

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Major League cricket ,MLC T20 cricket ,United States ,IPL ,Washington Freedom ,Dinakaran ,
× RELATED வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!