×

கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து 100% கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை நிறுத்தி வைத்தது கர்நாடக அரசு

பெங்களூரு: கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது. சி மற்றும் டி பிரிவு வேலைகள் 100% கன்னடர்களுக்கே ஒதுக்க வேண்டும் என கர்நாடக அரசு மசோதா கொண்டு வந்தது. புதிய மசோதாவுக்கு தொழில் நிறுவனங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கர்நாடக அரசு பின்வாங்கியது. கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை 100 சதவீதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்தது. மேலும், தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை அமர்த்தும் போது நிர்வாகப் பணிகளில் 50 சதவீத இடஒதுக்கீடும், நிர்வாகம் அல்லாத பிற பணிகளில் 70 சதவீதமும் கன்னட மக்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மசோதாவில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது 15 வருடங்களுக்கு மேலாக அம்மாநிலத்தில் வசித்து கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு இந்த மசோதாவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்தச் சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகா அரசு கொண்டு வந்திருந்த மசோதாவுக்கு ஐ.டி நிறுவனங்களின் சங்கமான மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (நாஸ்காம்) கண்டனம் தெரிவித்து மசோதாவை திரும்ப பெறுமாறு அம்மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது.

The post கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து 100% கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை நிறுத்தி வைத்தது கர்நாடக அரசு appeared first on Dinakaran.

Tags : KARNATAKA GOVERNMENT ,GANDANS ,AROSE ,Bengaluru ,Ghanadians ,Government of Karnataka ,C ,D ,Gannadians ,Gannada ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...