×

நெல்லை – கொல்கத்தா ஷாலிமார் இடையே நாளைமுதல் சிறப்பு ரயில்

நெல்லை: நெல்லையில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வடமாநில மக்கள் வேலையின் பொருட்டு தென்மாவட்டங்களுக்கு வந்து செல்லும் வகையில் நெல்லை – கொல்கத்தா ஷாலிமார் இடையே இந்த மாதத்தில் இரண்டு முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை – ஷாலிமார் சிறப்பு ரயில் (06087) நாளை (18ம் தேதி) மற்றும் வரும் 25ம் தேதி (வியாழன்) நெல்லையில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு ஷாலிமார் செல்கிறது.

மறுமார்க்கமாக ஷாலிமார் – நெல்லை சிறப்பு ரயில் (06088) வரும் 20ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் (சனிக்கிழமை) ஷாலிமாரில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு திங்கள்கிழமை மதியம் 1.15 மணிக்கு வருகிறது. இந்த ரயில்களில் 2 ஸ்லீப்பர் பெட்டிகள், 17 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான மற்றும் கார்டு பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த ரயில்கள் நெல்லையில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, கட்டாக், புவனேஸ்வர் வழியாக இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது.

The post நெல்லை – கொல்கத்தா ஷாலிமார் இடையே நாளைமுதல் சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kolkata Shalimar ,Kolkata ,Shalimar ,northern ,Nellai - ,Dinakaran ,
× RELATED சமஸ்கிருதம், இந்தியை திணிக்க கூடாது;...