×

வாழைத்தண்டு வடாம்

தேவையானவை:

இளம் நார் நீக்கி நறுக்கிய வாழைத்தண்டு – 1,
பச்சை மிளகாய் – 10,
புளித்த மோர் சிலுப்பியது – 1 கப்,
பெருங்காயம் – சிறிதளவு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – 3 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.

அரைக்க:

பச்சரிசி – ½ கிலோ,
ஜவ்வரிசி – 50 கிராம்.

செய்முறை:

பச்சரிசியை களைந்து நிழலில் உலர்த்தி ஜவ்வரிசி சேர்த்து மிஷினில் மாவாக்கவும். மாவின் அளவுக்கு இரண்டு மடங்கு நீர் எடுத்து சிலுப்பிய மோர் சேர்க்கவும். இதில் ஒரு பாதி அடுப்பில் ஏற்றி சூடாக்கி கொதித்து வரும்போது பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் நன்கு அரைத்து சேர்க்கவும். சீரகம் சேர்க்கவும். மீதி பாதி அளவு நீரில் மீதமிருந்த மாவை சேர்த்து நன்கு இளக்கி கொள்ளவும். கொதிக்கும் நீரில் கரைத்த அரிசி மாவு கொட்டி கட்டியின்றி நன்கு கிளறி அடுப்பை நிறுத்தி நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து நன்கு மேலும், கீழுமாக கிளறி மூடி வைக்கவும். மாவு நன்கு வெந்திருக்கும்.மாவு ஆறியவுடன் தேங்காய் எண்ணெயில் கையை தடவி, நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு வெயிலில் 5 நாட்கள் காயவிட்டு எடுக்கவும். வேண்டும் போது தேங்காய் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.

The post வாழைத்தண்டு வடாம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்